“கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

“கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்” –  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பில் 1,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25லட்சத்து 59ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று ஒரேநாளில் 26 பேர் உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34ஆயிரத்து 076ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒருமாத காலமாக இல்லாமல் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதால் கொரோனா 3வது அலை உருவாகி விட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கொரோனா மூன்றாம் அலை பரவாமல் தடுக்க இன்று முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

“கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்” –  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று காலை அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் மற்றும் காமராஜர் உள் நாட்டு விமான முனையம் ஆகியவற்றிலிருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ‘கொரோனா’பரிசோதனை சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ” ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம். அப்படி இல்லையென்றால் கேரளாவில் இருந்து வருபவர்கள் இரு தவணை தடுப்பூசி சான்று காட்டினால் தமிழகத்திற்குள் வரலாம். விமான நிலையத்தில் 13 நிமிடத்தில் கொரோனா சோதனை முடிவை அறிவிக்கும் நடைமுறை விரைவில் அமலாகிறது” என்றார்.

“கேரளாவில் இருந்து தமிழகம் வர ஆர்டிபிசிஆர் சான்றிதழ் கட்டாயம்” –  அமைச்சர் மா.சுப்பிரமணியன்

முன்னதாக கொரோனா 3-வது அலை வந்தாலும்,அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளதாகவும், இருப்பினும் தேவையில்லாமல் அண்டை மாநிலங்களுக்கு பொதுமக்கள் பயணிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.