சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் இருந்து ஒரே நாளில் ரூ.10 லட்சம் வசூல்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 14,753 ஐ கடந்துள்ளது. அதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை தான். சென்னையில் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9000ஐ எட்டியுள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு பெருமளவு உயர்ந்ததன் முக்கிய காரணம் கோயம்பேடு சந்தையில் கொரோனா வைரஸ் பரவியது தான்.சென்னையில் கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்த ‘நம்ம சென்னை கொரோனா விரட்டும் திட்டம்’ தொடங்கப்பட்டது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுமாறு தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

சென்னையில் முகக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மாஸ்க் அணியாமல் நடந்து சென்றால் ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று ஒரு நாள் மட்டும் வாகன ஓட்டிகளிடம் இருந்து ரூ.10 லட்சம் அபராதம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன சோதனையில் முகக்கவசம் அணியாத 2130 மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.500 அபராதம் விதித்ததன் மூலம் ரூ.10 லட்சம் கிடைத்துள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Most Popular

10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி இல்லை? – தெளிவுபடுத்த கோரிக்கை

10ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வு எழுதாதவர்கள், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் என்று அறிவிக்கப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை...

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

வந்தே பாரத் திட்டத்தின் மூலம் நேற்று இரவு துபாயில் இருந்து கோழிக்கோடு விமான நிலையத்துக்கு 190 பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்த ஏர் இந்தியா விமானம், தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. இந்த கோர...

பாதுகாப்பு குறைபாடு… 2019ம் ஆண்டே கோழிக்கோடு விமானநிலையத்துக்கு எச்சரிக்கை விடுத்த டிஜிசிஏ

கோழிக்கோடு விமான நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்கள் குறைவாக உள்ளது என்று 2019ம் ஆண்டே சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது தற்போது தெரியவந்துள்ளது. கோழிக்கோடு விமான விபத்தில் பைலட்கள் உள்பட 18 பேர்...

மேட்டூர் அணை நீர்வரத்து 45 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு 45 ஆயிரம் கன அடியாக உள்ளது என்று பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால்...