சாலைகள் பெயர் மாற்றம்! தேர்தல் முடிவுக்கு முன்னரே தமிழகத்துக்குள் நுழையும் பாஜக

 

சாலைகள் பெயர் மாற்றம்! தேர்தல் முடிவுக்கு முன்னரே தமிழகத்துக்குள் நுழையும் பாஜக

சென்னையில் பல முக்கிய சாலைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து தலைமைச் செயலரிடம் திமுக எம்பிக்கள் மனு அளித்துள்ளனர்.

சாலைகள் பெயர் மாற்றம்! தேர்தல் முடிவுக்கு முன்னரே தமிழகத்துக்குள் நுழையும் பாஜக

பல ஆண்டுகளாக இருந்துவரும் சாலைகளின் பெயரை திடீரென மாற்றம் செய்திருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றஞ்சாட்டியுள்ளார். இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த அவர், “சின்னமலையிலிருந்து சிம்சன் வரை மவுன்ட் ரோடு என அழைக்கப்பட்ட சாலைக்கு அண்ணா சாலை என கலைஞர்தான் பெயர் சூட்டினார். அதேபோல் கடற்கரை சாலைக்கும் காமராஜர் பெயரையும், பூவிந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் பெயரையும் கலைஞர் சூட்டினார். மாமல்லபுரம் சாலைக்கும் தற்போது பெயர் மாற்றம் செய்துள்ளனர். அண்ணா, பெரியார், காமராஜர் சாலை என அழைக்கப்பட்ட பெயர்கள் தற்போது அதிமுக அரசால் கைவிடப்பட்டுள்ளன.

பல்வேறு தரப்பிலிருந்து எதிப்பு எழுந்தபோதும் தமிழக அரசு மவுனம் காக்கிறது. யாருடைய தூண்டுதலின் பெயரில் தமிழக அரசு இந்த பெயர் மாற்றம் செய்கிறது?” என கேள்வி எழுப்பியுள்ளார்.