ஜாமீனில் வெளிவந்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி

 

ஜாமீனில் வெளிவந்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திமுக கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் கடந்த 23 ஆம் தேதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

ஜாமீனில் வெளிவந்தார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி

அதனைத்தொடர்ந்து அவருக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்து விட்டனர். இதற்கிடையில் பட்டியலின மக்களை இழிவாக பேசிய ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ய கோரி புதுக்கோட்டை காந்திநகரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.