ரேஷன் கடையில் ரூ.7 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை! அதிர்ச்சியில் மக்கள்!

 

ரேஷன் கடையில் ரூ.7 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை! அதிர்ச்சியில் மக்கள்!

சென்னையில் உள்ள ரேஷன் கடையில் கொரோனா நிவாரணம் அளிக்க வைத்திருந்த ரூ.7 லட்சம் கொள்ளை போனது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. போக்குவரத்து தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதனால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4000 அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த நிலையில், இந்தமாதம் முதல் தவணையாக ரூ.2000 நேற்றுமுதல் ரேஷன் கடைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மக்களுக்கு வீடு வீடாக டோக்கன் அளிக்கப்பட்டு நிவாரண தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

ரேஷன் கடையில் ரூ.7 லட்சம் கொரோனா நிவாரண நிதி கொள்ளை! அதிர்ச்சியில் மக்கள்!

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகரில் அமைந்துள்ள ரேஷன் கடையில், கொரோனா நிதி கொள்ளை போயுள்ளது. கொரோனா நிவாரண நிதி கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் , கொள்ளை போனதாக ரேஷன் கடை சூப்பர்வைசர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரேஷன் கடையில் ரூ. 7.36 லட்சம் கொள்ளை போயிருப்பதற்காக சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் கொரோனா நிவாரண நிதியை வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்ததால்,எ அவருக்கு கொரோனா நிதி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.