விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் : முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

 

விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் : முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

புயல்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் : முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், ‘நிவர் மற்றும் புரவி புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் வழங்கப்படும். விவசாயிகள் வங்கி கணக்கில் ஜன.7-ஆம் தேதி முதல் முதல் நேரடியாக நிவாரணம் வரைவு வைக்கப்படும். புயலால் பாதிக்கப்பட்ட 3.10 லட்சம் நிலங்களுக்காக ரூ.5,264.38 கோடி தேவை என மத்திய அரசிடம் கோரபட்டுள்ளது. பேரிடரால் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால் இடுபொருள் நிவாரணம் வழங்க உச்ச வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. 2 ஏக்கர் என்ற உச்ச வரம்பை தளர்த்தி பாதிக்கப்பட்ட பரப்பளவு முழுமைக்கும் நிவாரணம் தர ஆணையிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் : முதல்வர் பழனிசாமி அதிரடி அறிவிப்பு!

மேலும், ‘மானாவாரி மற்றும் பாசன வசதி பெற்ற பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500க்கு பதில் ரூ.20,000 வழங்கப்படும். பல்லாண்டு கால பயிர்களுக்கு நிவாரண தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.25,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து மானாவாரி பயிர்களுக்கும் இடுபொருள் நிவாரணத் தொகை ஹெக்டேருக்கு ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். மானாவாரி நெல் தவிர பிற பயிர்களுக்கு நிவாரணம் ஹெக்டேருக்கு ரூ.7,410ல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தி தரப்படும் ‘ என்றும் குறிப்பிட்டுள்ளார்.