”ரூ. 5,499க்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன் – ஜியோனி அறிமுகம் ! ”

 

”ரூ. 5,499க்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன் – ஜியோனி அறிமுகம் ! ”

ஃஎப்8 நியோ என்ற பெயரில் பட்ஜெட் ஸ்மார்ட்போனை ஜியோனி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

5.45 இன்ச் எச்டி பிளஸ் திரை, ஆண்டிராய்ட் 10 இயங்குதளத்துடன் 5,499 ரூபாய் என்ற விலைக்கு அறிமுகமாகி உள்ள இந்த போன், 2ஜிபி ரேம் 32 ஜிபி மெமரியுடன் வருகிறது. மேலும் எஸ்டி கார்டு மூலமாக 256 ஜிபி வரை இதன் மெமரியை நீட்டித்துக்கொள்ளலாம். கருப்பு, நீலம் மற்றும் சிவப்பு ஆகிய வண்ணங்களில் வரும் இந்த போன்கள் ஆக்டா கோர் யுனிசோக் பிராசசரில் இயங்குகிறது. மேலும், பின்புறத்தில் 8 மெகா பிக்சல் கேமராவும், முன்புறத்தில் எல்இடி பிளாஷ் உடன் கூடிய 5 மெகா பிக்சல் செல்ஃபி கேமராவும் உள்ள இந்த போன், 3000 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது.

”ரூ. 5,499க்கு பட்ஜெட் ஸ்மார்ட்போன் – ஜியோனி அறிமுகம் ! ”

இந்த போனில் விரல்ரேகை சென்சார் இருப்பதாக குறிப்பிடப்படவில்லை என்ற போதும், ஃபேஸ் அன்லாக் வசதி இருக்கிறது. மேலும், இளைஞர்களை கவரும் விதமாக பியூட்டி மோட், ஸ்லோ மோஷன், நைட் மோட் உள்ளிட்ட மோட்களும் உள்ளன. மேலும், புளூடூத், 3.5எம்எம் ஹெட்போன் ஜாக் என ஏராளமான சிறப்பம்சங்களுடன் வந்துள்ள இந்த போன், பண்டிகை காலத்தை முன்னிட்டு பட்ஜெட் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • எஸ். முத்துக்குமார்