சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50லட்சம் பறிமுதல்!

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50லட்சம் பறிமுதல்!

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50லட்சம் பறிமுதல்!

சென்னை பனகல் மாளிகையில் இருக்கும் சுற்றுச்சூழல் துறை அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன். இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து கடந்த மாதம் அவரது வீட்டில், ரூ.1.37 கோடி கணக்கில் வராத பணமும், 3 கிலோ தங்க நகைகளும் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சென்னையில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பாண்டியன் கைது செய்யப்பட்டார்.

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50லட்சம் பறிமுதல்!

இந்நிலையில் சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ. 50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பாண்டியன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள பாண்டியனின் வீடு மற்றும் வங்கி லாக்கரில் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னையில் இருந்து 6 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்து ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்து ரூ.50லட்சம் பறிமுதல்!

முன்னதாக பாண்டியனின் வங்கி லாக்கரை சோதனை செய்ய அனுமதி வழங்குமாறு வங்கிகளுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் எழுதிய நிலையில் சோதனை நடைபெற்றுள்ளது. அதேபோல் ஊழல் புகாரில் சிக்கிய பாண்டியனை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. .