குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4,00,000 காப்பீடு : தமிழக அரசின் புதிய அறிவிப்பு

குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4,00,000 காப்பீடு :  தமிழக அரசின் புதிய  அறிவிப்பு

தமிழக இடைக்கால பட்ஜெட்டை இன்று துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓபிஎஸ்சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், ” முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாநிலத்தின் நீர்வள ஆதாரங்களை பாதுகாப்பதை முதன்மையாக நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறார். அதனால் 2019 ஆம் ஆண்டுக்கான தேசிய நீர் விருது கிடைத்தது” என்றார். அத்துடன் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.1, 418 கோடி ரூபாய் செலவில் 6211 பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 5886 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது என்றார்.

குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4,00,000 காப்பீடு :  தமிழக அரசின் புதிய  அறிவிப்பு

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் சாமானியர்களுக்கான அறிவிப்புகளில் 6 முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களின் பாடத்திட்டத்தில் கணிப்பொறி மற்றும் அறிவியல் பாடங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கோவையில் 6,683 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டம், 44 கிலோமீட்டர் வரை அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4,00,000 காப்பீடு :  தமிழக அரசின் புதிய  அறிவிப்பு

12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது, அதில் 2,000 புதிய மின்சார பேருந்துகள் வாங்க போக்குவரத்து கழகத்திற்கு 623 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற திட்டம் வகுக்கப்பட்டு 688 கோடியும், வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள குடும்பத்தலைவரின் விபத்து மரணத்திற்கு ரூ.4 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடும்பத்தலைவர் விபத்தில் இறந்தால் ரூ.4,00,000 காப்பீடு :  தமிழக அரசின் புதிய  அறிவிப்பு

இயற்கை மரணம் மற்றும் இயலாமைக்கு அம்மா காப்பீடு திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சமும் வழங்கப்படும். என்றும் கனடாவில் டொரோண்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைத்திட உதவித்தொகை அளிக்கப்படும் என்றும் பட்ஜெட் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.