புயல் பாதிப்பு சீரமைக்கு ரூ.3,758 கோடி வேண்டும்! மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

 

புயல் பாதிப்பு சீரமைக்கு ரூ.3,758 கோடி வேண்டும்! மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளுக்கு 3 ஆயிரத்து 758 கோடி ரூபாய் தேவை என மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

வங்கக்கடலில் கடந்த மாதம் உருவான நிவர் புயல் கடந்த 25ஆம் தேதி கரையை கடந்தது. இதனை தொடர்ந்து புரெவி புயல் வந்து பலத்த சேதங்களை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து ஏற்பட்ட புயல்களால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. அப்போது தமிழக முதல்வரை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி, தமிழகத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக உறுதி அளித்தார். இந்நிலையில் தமிழகத்தில் புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்திய குழு இன்று சென்னை வந்தது. சம்பர் 8ஆம் தேதி வரை தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட சேதங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர்.

புயல் பாதிப்பு சீரமைக்கு ரூ.3,758 கோடி வேண்டும்! மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை

இந்நிலையில் இன்று பிற்பகல் முதலமைச்சருடன் தலைமை செயலகத்தில் மத்திய குழுவினர் ஆலோசனை தொடர்ந்து. தமிழகத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக சீரமைக்க ரூ.3,108 கோடியும், மொத்தமாக, ரூ.3,758 கோடியும் வழங்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக நிவாரணமாக 650 கோடி தேவை என மத்திய குழுவிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் மத்திய குழுவினர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்து அதனை அறிக்கையாக அளித்த பின்னரே மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடதக்கது.