ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய எல்.ஐ.சி விற்கப்படுவதை ஏற்க முடியாது! – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய எல்.ஐ.சி விற்கப்படுவதை ஏற்க முடியாது! – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தைத் தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசு முயற்சிக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முடிவை கைவிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய எல்.ஐ.சி விற்கப்படுவதை ஏற்க முடியாது! – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
LIC

இது தொடர்பாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் கோடான கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் செப்டம்பர் 1 ஆம் நாள், 65 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. வெறும் 5 கோடி ரூபாய் முதலீட்டில் 1956 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள், எல்.ஐ.சி நிறுவனம் தொடங்கப்பட்டது. 64 ஆண்டுகளில், 13 ஆவது திட்டக் காலத்தில் எல்.ஐ.சி. நிறுவனத்திடமிருந்து மத்திய அரசு பெற்றுள்ள நிதி ஏழு லட்சம் கோடிக்கு மேல் என்பது மறுக்க முடியாத உண்மை.

ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய எல்.ஐ.சி விற்கப்படுவதை ஏற்க முடியாது! – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
LIC

தற்போது எல்.ஐ.சி நிறுவனம் மட்டும்தான் தனியார் நிறுவனங்களுக்குக் கடும் போட்டியை உருவாக்கி இருக்கிறது. எல்.ஐ.சி தொடங்கப்பட்ட காலத்தில் பிரதமர் ஜவர்கலால் நேரு அவர்கள் மூன்று முக்கியமான நோக்கங்களைப் பிரகடனம் செய்தார். ஒன்று, காப்பீட்டுப் பாதுகாப்பு என்பது நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும். இரண்டாவதாக, நுகர்வோருக்கு தரும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மூன்றாவதாக, மக்கள் சேமிப்பு மக்கள் நலனுக்கே என்ற வகையில் நாட்டின் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்துவது. இந்தக் குறிக்கோள்களை 64 ஆண்டுகளாக எல்.ஐ.சி நிறுவனம் உறுதியோடு நிறைவேற்றி வருவதால்தான் இன்று 42 கோடி மக்களுக்கு ஆயுள் காப்பீடு வழங்கி, காப்பீட்டுத் துறையில் முன்னணி முதன்மை நிறுவனமாக எல்.ஐ.சி திகழ்கிறது.

ரூ.32 லட்சம் கோடி மதிப்புடைய எல்.ஐ.சி விற்கப்படுவதை ஏற்க முடியாது! – மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
Vaiko

32 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்து மதிப்பைப் பெற்றிருக்கும் எல்.ஐ.சி நிறுவனத்தை முழுமையாகத் தனியாருக்குத் தாரைவார்த்திட, பங்குகள் விற்பனைக்கு மத்திய பா.ஜ.க அரசு நடவடிக்கை எடுத்து வருவது வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும். காப்பீட்டுத் துறையில் தனியார் முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் நிறுவனமான எல்.ஐ.சி பங்குகளை விற்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. மத்திய அரசு இந்த முடிவைக் கைவிட வேண்டும். நூற்றாண்டு கடந்தும் எல்.ஐ.சி நிறுவனம் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.