‘பண்டிகை காலங்களைப் போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

 

‘பண்டிகை காலங்களைப்  போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த மாதத்தை போலவே, இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் மக்கள் முந்தைய தினமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். குறிப்பாக டாஸ்மாக்குகளில் எல்லா சனிக்கிழமையும் குடிமகன்கள் குவிகின்றனர். அந்த வகையில் நாளை முழு பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் இன்று சுதந்திர தினம் என்பதால் இன்றும் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

‘பண்டிகை காலங்களைப்  போன்று’.. டாஸ்மாக்குகளில் ஒரே நாளில் ரூ.248 கோடிக்கு மது விற்பனை!

இந்த நிலையில், 2 நாட்கள் தொடர்ந்து டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று ஒரே நாளில் டாஸ்மாக்கில் ரூ.248 கோடி மது விற்பனையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை மட்டுமே ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது. வழக்கமாக பண்டிகை காலங்களில் மட்டுமே ரூ.200 கோடிக்கு மேல் மது விற்பனை ஆகும். ஆனால் நேற்று மட்டுமே மதுரையில் ரூ.66.45 கோடிக்கும், திருச்சியில் ரூ.55 கோடிக்கும், சேலத்தில் ரூ.54.60 கோடிக்கும் கோவையில் ரூ.49.78 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக்குகளில் ரூ.250 கோடி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், ரூ.248 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.