ரூ. 2,206 கோடி நஷ்டம் – மண்டல கிராம வங்கிகள் குறித்து அதிர்ச்சி தகவல்

ரூ. 2,206 கோடி நஷ்டம் – மண்டல கிராம வங்கிகள் குறித்து அதிர்ச்சி தகவல்

கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்த 2019-20ம் நிதியாண்டில், மண்டல கிராம வங்கிகள் ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 206 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது தெரியவந்துள்ளது.

ரூ. 2,206 கோடி நஷ்டம் – மண்டல கிராம வங்கிகள் குறித்து அதிர்ச்சி தகவல்

கிராம்ப்புற மக்களுக்கு சேவையளிக்கவும், வேளாண் தொழில் உள்ளிட்ட கிராம மக்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவிடும் வகையில் மண்டல கிராம வங்கிகள் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நாடெங்கிலும், 26 மாநிலங்களில், 685 மாவட்டங்களில் மொத்தம் 45 மண்டல கிராம வங்கிகள், ஆயிரக்கணக்கான கிளைகளுடன் இயங்கி வருகின்றன. எஸ்பிஐ, இந்தியன் வங்கி உள்ளிட்ட 15 வங்கிகள், இந்த ஊரக வங்கிகளுக்கு நிதி அளித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த மார்ச் உடன் முடிந்த 2019- 20ம் நிதியாண்டில், மண்டல ஊரக வங்கிகள், ஒட்டுமொத்தமாக 2 ஆயிரத்து 206 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாக. தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியின் (நபார்டு) அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது.

ரூ. 2,206 கோடி நஷ்டம் – மண்டல கிராம வங்கிகள் குறித்து அதிர்ச்சி தகவல்

மொத்தம் உள்ள 45 மண்டல கிராம வங்கிகளில், 26 வங்கிகள் 2 ஆயிரத்து 203 கோடி ரூபாய் லாபத்தை பெற்றுள்ள அதே சமயம், 19 மண்டல கிராம வங்கிகள், 4 ஆயிரத்து 409 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதும் தெரியவந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் மண்டல கிராம வங்கிகளின் வைப்பு தொகை 10.2 சதவீத வளர்ச்சியும், கடன் தொகை 9.5 சதவீதமும் வளர்ச்சி பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. மேலும், மொத்த நிலுவை கடன் தொகை 2.98 லட்சம் கோடி ரூபாயாக இருந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ரூ. 2,206 கோடி நஷ்டம் – மண்டல கிராம வங்கிகள் குறித்து அதிர்ச்சி தகவல்
  • எஸ்.முத்துக்குமார்