புதையல் எடுப்பதாக கூறி, விவசாயியிடம் ரூ.22 லட்சம் மோசடி – ஜோதிடர் கைது!

 

புதையல் எடுப்பதாக கூறி, விவசாயியிடம் ரூ.22 லட்சம் மோசடி – ஜோதிடர் கைது!

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் புதையல் எடுப்பதாக கூறி விவசாயியிடம் ரூ.22 லட்சம் பணம், 45 சவரன் நகைகளை மோசடி செய்த, ஜோதிடரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரை அடுத்த அரியபுத்தம்பட்டியை சேர்ந்தவர் தங்கவேல். விவசாயி. இவருக்கு, தொழில் தொடர்பாக திருப்பூரை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அப்போது, தங்கவேலின் தோட்டத்தில் தங்க புதையல் இருப்பதாகவும், அதனை தான் எடுத்து தருவதாகவும் சசிகுமார் கூறியுள்ளார்.

இதனை நம்பிய தங்கவேல், புதையல் எடுக்க பூஜை செய்வதற்காக சசிகுமாரிடம் பல தவணைகளாக 22 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 45 சரவன் தங்க நகைகளை வழங்கியுள்ளார். மேலும், சசிகுமாருக்கு அவர் கார், புல்லட் உள்ளிட்டவற்றையும் வழங்கி உள்ளார். ஆனால் கூறியபடி தோட்டத்தில் புதையல் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

புதையல் எடுப்பதாக கூறி, விவசாயியிடம் ரூ.22 லட்சம் மோசடி – ஜோதிடர் கைது!

இதனால் தங்கவேல், பணம் – நகையை திருப்பி கேட்டபோது, அதனை வழங்காமல் சசிகுமார் தாமதித்து வந்துள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தங்கவேலு, இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி., ரவளி பிரியாவிடம் புகார் அளித்தார்.

அவரது அறிவுறுத்தலின் பேரில், குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட சசிகுமாரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.