இனி ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்கள் வராது!

 

இனி ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்கள் வராது!

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் புழக்கத்திலிருந்த 2000 ரூபாய் நோட்டுகள் இனி ஏடிஎம் இயந்திரங்களில் கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பணமதிப்பு நடவடிக்கை அமலானது. அப்போது புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு, புதிதாக 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்தன. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகள் வந்தபிறகு கள்ள நோட்டுப் புழக்கமும், கருப்புப் பணமும் இன்னும் அதிகரித்துவிட்டதாகப் புகார்கள் எழுந்தன.

இனி ஏடிஎம்களில் ரூ.2000 நோட்டுக்கள் வராது!

இந்த சூழ்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 2000 நோட்டுகள் அச்சடிக்கப்படுவது நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்றாற்போல தான் நோட்டுகள் அச்சடிக்கப்படுவதாக நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில்2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி முடிவுசெய்திருப்பதாகவும், இதனால் 2000 ரூபாய் நோட்டுக்களை அச்சிடும் பணியை நிறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக பெரும்பாலான ஏடிஎம்களில் இப்போது 2000 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதில்லை. குறிப்பாக சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல், யூனியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களிலும் 2000 ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 2000 ரூபாய்க்கான விநியோக தடை படிப்படியாக அனைத்து வங்கிகளுக்கும் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.