தீபாவளி பரிசு: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டம்?

 

தீபாவளி பரிசு: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டம்?

தீபாவளி பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 2,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலவச வேட்டி, சேலை, கரும்பு, பொங்கல் தொகுப்பு பொருட்களுடன், ஆயிரம் ரொக்கப் பரிசை தமிழக அரசு வழங்குவது வழக்கம். ஆனால் இந்த அண்டு தீபாவளிக்கும் இதுபோன்ற பரிசை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தீபாவளி பரிசு: குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.2000 ரொக்கம் வழங்க தமிழக அரசு திட்டம்?

கொரோனா பொதுமுடக்கத்தால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால், அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் நோக்கில் இந்த ரொக்கப் பரிசை வழங்க அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது, இதேபோல் வரும் பொங்கல் பண்டிகைக்கும் வழக்கமாக வழங்கப்படும் ரூ.1000 த்துடன், கூடுதலாக ரூ.1000 வழங்க பரிசீலித்துவருகிறது. முன்னதாக கொரோனா பொதுமுடக்கத்தை கருத்தில் கொண்டு கடந்த ஏப்ரல் மாதம் அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தமிழக அரசு ரூ.1000 ரொக்கம் வழங்கியது.

எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டே தீபாவளிக்கு பணம் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பிவருகின்றனர்.