நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் அறிவிப்பு

 

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் அறிவிப்பு

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் மூணாறு பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் இன்று காலை 4 மணியளவில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. கேரளா முழுவதிலும் பெய்யும் கனமழையால் இந்த நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், 80 பேர் மாயமாகி இருப்பதாக காலை தகவல் வெளியானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு துறையினர் அவர்கள் மண்ணில் புதையுண்டு இருக்கலாம் என கூறினார். அதனைத்தொடர்ந்து மீட்புப் பணித் தொடங்கியது.

நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் : பிரதமர் அறிவிப்பு

இதனிடையே தீயணைப்புத்துறையினருடன் தேசிய மீட்புப்படை குழுவினரும் இணைந்தனர். அதன் பின்னர் மீட்புப் பணி துரிதப்படுத்தப்பட்டு இதுவரை 17 சடலங்கள் நிலச்சரிவில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் நிலச்சரிவில் சிக்கி உயிருக்கு போரடிக் கொண்டிருந்த 16 பேர் மீட்கப்பட்டு மூணாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரள முதல்வர் மீட்புப் பணிக்காக விமானப்படையின் உதவி கோரினார். ஆனால் அங்கு மழை நீடித்து வருவதால் விமானப்படை மீட்புப்பணியில் ஈடுபடுவது சிரமமான காரியம். இருப்பினும் 200 பேரிடர் மீட்புக் குழுவினரை வைத்து மீட்புப் பணி தொடரும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அதே போல நிலச்சரிவில் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.