ரூ.1950 கோடி ஃபைபர் ஆப்டிக் டெண்டர் முறைகேடு… 18ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு

 

ரூ.1950 கோடி ஃபைபர் ஆப்டிக் டெண்டர் முறைகேடு… 18ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவு

அ.தி.மு.க அரசு ரூ.1950 கோடி அளவுக்கு ஆப்டிக் கேபிள் முறைகேட்டில் ஈடுபட்டதாக தி.மு.க தொடர்ந்த வழக்கில் ஜூன் 18ம் தேதி பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரூ.1950 கோடி ஃபைபர் ஆப்டிக் டெண்டர் முறைகேடு… 18ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவுதமிழக அரசு அனைத்து கிராமங்களையும் ஆப்டிக் ஃபைபர் இழை மூலம் இணைக்கும் திட்டத்தை ரூ.1950 கோடியில் செயல்படுத்தி வருகிறது. இதற்கான டெண்டர் விட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் உதயகுமார் உள்ளிட்டவர்கள் மோசடி செய்ததாக தி.மு.க தரப்பில் புகார் கூறப்பட்டது. தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் இது தொடர்பாக புகாரும் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை.

ரூ.1950 கோடி ஃபைபர் ஆப்டிக் டெண்டர் முறைகேடு… 18ம் தேதிக்குள் பதில் அளிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவுஇதனால், லஞ்ச ஒழிப்புத் துறையினர் புகாரைப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிடும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க தரப்பில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.எஸ்.பாரதி மனு தொடர்பாக வருகிற 18ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தமிழக முதல்வர், அமைச்சர்கள் டெண்டர் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் செய்துவிட்டதாக ஆர்.எஸ்.பாரதி புகார் கூறி வருகிறார். இதனால் அவரை கைது செய்து சிறையில் அடைக்க அ.தி.மு.க அரசு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. டான்சி உள்ளிட்ட வழக்குகளில் ஜெயலலிதா சிறை செல்ல ஆர்.எஸ்.பாரதி காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.