‘ஒரே நாளில் ரூ.189.38 கோடி வசூல்’.. லாக்டவுனை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை!

 

‘ஒரே நாளில் ரூ.189.38  கோடி வசூல்’.. லாக்டவுனை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 30 ஆம் தேதி ஊரடங்கு குறித்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், கடந்த மாதத்தை போலவே இந்த மாதமும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு பொதுமுடக்கம் அமலில் இருக்கும் என தெரிவித்திருந்தார். அதன் படி அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த தினத்தின்று வழக்கமாக அமலில் இருக்கும் தளர்வுகள் கூட கிடையாது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வெளியே வர வேண்டிய சூழல் ஏற்படும். அதனால் மக்கள் முந்தைய தினமே தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக் கொள்கின்றனர். இதில் டாஸ்மாக் மட்டும் விதிவிலக்கல்ல.

‘ஒரே நாளில் ரூ.189.38  கோடி வசூல்’.. லாக்டவுனை முன்னிட்டு டாஸ்மாக்கில் கொட்டிய பணமழை!

இன்று பொதுமுடக்கம், டாஸ்மாக் கடைகள் இருக்காது என்பதால் நேற்றே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்கள் குவிந்தனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதிலும் உள்ள டாஸ்மாக்குகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடி வசூலாகியிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.41.57 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. கடந்த வாரம் சனிக்கிழமை ரூ.188.86 கோடி வசூலாகி இருந்த நிலையில் நேற்று அதை விட அதிகமாக ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.