அரசு பள்ளியில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.18.94 கோடி நிதி ஒதுக்கீடு!

 

அரசு பள்ளியில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.18.94 கோடி நிதி ஒதுக்கீடு!

அரசு பள்ளியில் உடற்கல்வியை ஊக்குவிக்க தமிழக அரசு சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் வகுப்புகள், லேப்டாப், ஆன்லைன் வகுப்புகள் என தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ,சீருடை ,புத்தகம் என தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டு வருகிறது.

அரசு பள்ளியில் உடற்கல்வியை ஊக்குவிக்க ரூ.18.94 கோடி நிதி ஒதுக்கீடு!

இந்நிலையில் அரசுப்பள்ளியில் உடற்கல்வியை ஊக்குவிக்கும் முதற்கட்டமாக பள்ளிக்கல்வித்துறை ரூ.18.94கோடி நிதிஒதுக்கீடு செய்துள்ளது. மேல்நிலை, உயர்நிலை பள்ளிகளுக்கு தலா ரூ.25,000 நிதி ஒதுக்கீடு செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தொடக்க பள்ளிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம், நடுநிலை பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் விளையாட்டு உட்கட்டமைப்புக்கு ஏற்றவாறு தரமான உபகரணங்களை வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.