தனிமைப்படுத்தும் முகாம்கள் கட்டமைப்புக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

 

தனிமைப்படுத்தும் முகாம்கள் கட்டமைப்புக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 2,396 பேருக்கு கொரோனா தொற்று பரவியதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸ் அதிகமாக பரவியிருக்கும் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டிருப்பினும், பாதிப்பு குறைய வில்லை. ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு உயிர் பிழைத்துக் கொள்ள சென்னையில் இருந்து வெவ்வேறு மாவட்டங்களுக்கு சென்றவர்கள் மூலமாக கொரோனா அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது. அதனால் மாவட்ட எல்லைகளில் தீவிர வாகன சோதனை செய்யப்பட்டு வருகிறது.

தனிமைப்படுத்தும் முகாம்கள் கட்டமைப்புக்கு ரூ.16.66 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு

இதனிடையே கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவதால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்தும் முயற்சியில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசு கட்டிடங்கள், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்தும் தனிமைப்படுத்தும் முகாம்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தனிமைப்படுத்தும் முகாம்களின் கட்டமைப்புக்கு ரூ.16.66 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்குவோருக்காக உணவு, உறைவிடம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்த இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், மதுரை மாவட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.