ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்!

 

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்!

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அருகே ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் சோதனைச் சாவடியில நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு வாகனத்தை போலீசார் மறித்து நிறுத்த முயன்றனர். ஆனால் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாக புறப்பட்டு சென்றார்.

இதனை அடுத்து, போலீசார் அந்த வாகனத்தை துரத்திச் சென்று பிடித்தனர். அப்போது வாகனத்தை நிறுத்திவிட்டு, ஓட்டுநர் உள்ளிட்ட இருவர் தப்பியோடினர். தொடர்ந்து, வாகனத்தின் உள்ளே போலீசார் சோதனையிட்ட போது, அதனுள் தர்பூசணி பழங்களுக்கு அடியில் மறைத்து செம்மரங்களை கடத்தியது தெரியவந்தது.

ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் செம்மரங்கள் பறிமுதல்!

இதனை அடுத்து, வாகனத்துடன் சுமார் ஒரு டன் அளவிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் ரூபாய் ஆகும். தொடர்ந்து, செம்மரக்கடத்தல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.