தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

தூத்துக்குடி செக்காரக்குடியில் நேற்று கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. அங்கு தொழிலாளர்கள் சுத்தம் செய்து கொண்டிருக்கையில் அந்த தொட்டியில் இருந்து விஷவாயு வெளியாகியது. இதனை சுவாசித்த 4 தொழிலாளர்களும் அடுத்தடுத்து சுவாசித்து மயங்கி விழுந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துவிட்டு, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உயிரிழந்த 4 பேரின் உடல்களின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், இன்று உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

இந்த நிலையில் தூத்துக்குடி அருகே விஷவாயு தாக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும், செக்காரக்குடியில் உயிரிழந்த பாண்டி, இசக்கிராஜ், தினேஷ், பாலகிருஷ்ணன் ஆகியவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலும் தெரிவித்துள்ளார்.