ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடு – தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம்!

ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடு – தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம்!

14 நிறுவனங்கள் ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடு செய்ய தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம் செய்கிறது.

ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடு – தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம்!

சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. 14 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் முதலீடு செய்வதன் மூலம் சுமார் 7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட், அப்போலோ டயர்ஸ், பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனங்கள் முதலீடு செய்கின்றன.

ரூ.10 ஆயிரம் கோடி தொழில் முதலீடு – தமிழக அரசுடன் இன்று ஒப்பந்தம்!

பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம் நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் அமைக்கப்படுகிறது. ஐநாக்ஸ் லிக்யூடு ஆக்சிஜன் சிலிண்டர் ஆலை ஓசூரிலும், அப்பல்லோ டயர் ஒரகடத்திலும் அமைக்கப்படுகிறது. ஏப்ரலில் இருந்து 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில் மேலும் 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.