திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1.20 கோடி ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன!

 

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1.20 கோடி ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன!

திருச்சி

திருச்சி அரசு மருத்துவமனைக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 160 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டது.

இதன்படி, திருச்சி மெட்ரோ ரோட்டரி சங்கம் சார்பில் ரூ1.20 கோடி மதிப்பிலான 100 ஆக்சிஜன் செறிவூட்டிகளும், புளு சன் பவுண்டேஷன் மற்றும் இந்திய தொழிற்துறை கூட்டமைப்பின் சார்பில் ரூ. 40 லட்சம் மதிப்பிலான 40 செறிவூட்டிகளை அதன் நிர்வாகிகள், நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் வழங்கினர்.

இதனை தொடர்ந்து செயதியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபர்களுடன், உடனிருக்கும் நபர்களால் தொற்று அதிகரிப்பதாகவும், அவர்கள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறினார்.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.1.20 கோடி ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டன!

திருச்சி மாவட்டத்தில் முதல்வர் தொடங்கி வைத்த கொரோனா சிகிச்சை மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தொட்டியம், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆக்சிஜன் படுக்கைகள் செயல்பாட்டிற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தடுப்பூசி செலுத்துமிடங்களில் மருந்து இருப்பு குறித்து தகவல்களை கேட்டு அரசியல் கட்சியினர் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர், திமுக எம்எல்ஏ-க்கள் பழனியாண்டி இனிகோ இருதயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.