வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.36 கோடி கடனுதவி

 

வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.36 கோடி கடனுதவி

ஈரோடு

ஈரோடு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 3 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு, மத்திய கூட்டுறவு வங்கி சார்பில் 1 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் தொகை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் கலந்துகொண்டு 145 பயனாளிகளுக்கு கடன்தொகையை வழங்கினார். இதன்படி, அம்மாபேட்டை ஒன்றியம் கேசரிமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 75 பயனாளிகளுக்கு 65 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில், மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டது.

வேளாண் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு ரூ.1.36 கோடி கடனுதவி

தொடர்ந்து, மாணிக்கம்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தை சேர்ந்த 20 பயனாளிகளுக்கு 17 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும், பங்கு ஈவு தொகையாக 5 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. அதேபோல், ஒலகடம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் 33 பயனாளிகளுக்கு 28 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பீட்டில் மத்திய காலக் கடன்களையும், 17 பேருக்கு 15 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயிர்க்கடன்களையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா பார்த்திபன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.