கொரோனாவால் விற்பனையில் சறுக்கிய ராயல் என்பீல்டு, ஹீரோ மோட்டோகார்ப்

 

கொரோனாவால் விற்பனையில் சறுக்கிய ராயல் என்பீல்டு, ஹீரோ மோட்டோகார்ப்

கடந்த ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் ஆகிய நிறுவனங்களின் வாகன விற்பனை சரிவு கண்டுள்ளது.

எய்ஷர் மோட்டார் நிறுவனத்தின் இரு சக்கர வாகன தயாரிப்பு பிரிவு ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 53,298 புல்லட்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 மார்ச் மாதத்தை காட்டிலும் 19 சதவீதம் அதிகமாகும். அந்த மாதத்தில் ராயல் என்பீல்டு மொத்தம் 66,058 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்து இருந்தது.

கொரோனாவால் விற்பனையில் சறுக்கிய ராயல் என்பீல்டு, ஹீரோ மோட்டோகார்ப்
ராயல் என்பீல்டு மோட்டார் சைக்கிள்

ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உள்நாட்டில் 48,789 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2020 மார்ச் மாதத்தில் இந்நிறுவனம் உள்நாட்டில் 60,173 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. 2021 ஏப்ரல் மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 4,509 வாகனங்களை ஏற்றுமதி செய்து இருந்தது. அதேசமயம் கடந்த மார்ச் மாதத்தில் 5,885 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது.

கொரோனாவால் விற்பனையில் சறுக்கிய ராயல் என்பீல்டு, ஹீரோ மோட்டோகார்ப்
ஹீரோமோட்டோகார்ப்

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மாதம் 3.72 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது 2021 மார்ச் மாதத்தை காட்டிலும் 35 சதவீதம் குறைவாகும். அந்த மாதத்தில் இந்நிறுவனம் 5.76 லட்சம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. கோவிட்-19 இரண்டாவது அலையின் பாதிப்பு காரணமாக இந்நிறுவனத்தின் ஆலைகள் மற்றும் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதால் விற்பனை குறைந்துள்ளது.