`மண்ணிவாக்கம் தனது கோட்டை; பணம் கொடுத்து விடு, இல்லன்னா கொன்றுவிடுவேன்!’- மருந்துக்கடை ஓனரை மிரட்டிய பிரபல ரவுடி சிலம்பு

 

`மண்ணிவாக்கம் தனது கோட்டை; பணம் கொடுத்து விடு, இல்லன்னா கொன்றுவிடுவேன்!’- மருந்துக்கடை ஓனரை மிரட்டிய பிரபல ரவுடி சிலம்பு

“கடை நடத்த வேண்டுமானால் 50,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். பணம் தரவில்லை என்றால் கடையை நடத்த விடமாட்டேன். பணம் தர மறுத்தால் கொலை செய்து விடுவேன்” என்று மருந்துக்கடை உரிமையாளரை பிரபல ரவுடி சிலம்பு மிரட்டியுள்ளார். அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், பொழிச்சலூரில் கடந்த ஆண்டு ஆயுதபூஜையின் போது பணம் கேட்டு கொடுக்காததால், பழைய இரும்பு கடையை சூறையாடிய வழக்கில் கைதானவர் ரவுடி சிலம்பு. இந்த வழக்கில் ஜாமீனில் வந்த சிலம்பு, தற்போது மருந்துக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

`மண்ணிவாக்கம் தனது கோட்டை; பணம் கொடுத்து விடு, இல்லன்னா கொன்றுவிடுவேன்!’- மருந்துக்கடை ஓனரை மிரட்டிய பிரபல ரவுடி சிலம்பு

சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் வினோத் குமார் . இவர் அதே பகுதியில் ஐந்து ஆண்டுகளாக மருந்துக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், 5 மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் மற்றொரு மருந்துக் கடைகளை திறந்துள்ளார் வினோத் குமார். இதைப்பார்த்த, ரவுடி சிலம்பு, வினோத் குமாரிடம், தங்கள் பகுதியில் கடை நடத்த வேண்டுமானால் 50,000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். பணம் தரவில்லை என்றால் கடையை நடத்த விடமாட்டேன். பணம் தர மறுத்தால் கொலை செய்து விடுவேன். தனது மிரட்டல் குறித்து யாரிடம் வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளுமாறும் யாராலும் எவராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது மண்ணிவாக்கம் தனது கோட்டை” என்று சிலம்பு பேசியுள்ளார்.

`மண்ணிவாக்கம் தனது கோட்டை; பணம் கொடுத்து விடு, இல்லன்னா கொன்றுவிடுவேன்!’- மருந்துக்கடை ஓனரை மிரட்டிய பிரபல ரவுடி சிலம்பு

இதையடுத்து, 10-க்கும் மேற்பட்ட கும்பலை அனுப்ப சிலம்பு, வினோத்குமாரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். இந்த மிரட்டலால் அச்சமடைந்த வினோத்குமார், மருந்தகம் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். அவர்களின் அறிவுறுத்தல்படி மண்ணிவாக்கம் காவல்நிலையத்தில் ரவுடி சிலம்பு மீது வினோத்குமார் புகார் அளித்தார். இந்த புகாரையடுத்து, ரவுடி சிலம்பு மீது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு பொழிச்சலூரில் உள்ள இரும்பு கடையில் புகுந்து ஆயுத பூஜை கொண்டாடுவதற்காக பணம் கேட்டு தாக்குதலில் ஈடுபட்ட சம்பவத்தில் கைதாகி ஜாமீனில் வெளிவந்துள்ளார் ரவுடி சிலம்பு. சிறையில் இருந்து வெளி வந்ததும் மீண்டும் சிலம்பு தனது ஆட்டம் தொடங்கியுள்ளார். சிலம்பு மீது கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் வினோத்குமார் புகாரில் ரவுடியை வலைவீசி தேடி வருகின்றனர்.