`ஒருபக்கம் ஊரடங்கு; மறுபக்கம் உண்டியல் திருட்டு!’- அதிகாலையில் கோயிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

`ஒருபக்கம் ஊரடங்கு; மறுபக்கம் உண்டியல் திருட்டு!’- அதிகாலையில் கோயிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

புதுச்சேரியில் தடை உத்தரவு அமலில் இருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், சாலையோரத்தில் இருந்த கோயில் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர்.

`ஒருபக்கம் ஊரடங்கு; மறுபக்கம் உண்டியல் திருட்டு!’- அதிகாலையில் கோயிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

`ஒருபக்கம் ஊரடங்கு; மறுபக்கம் உண்டியல் திருட்டு!’- அதிகாலையில் கோயிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

புதுச்சேரியில் மையப் பகுதியில் இருக்கிறது அண்ணா சாலை. இங்கு 60 ஆண்டுகளுக்கு மேலாக 45 அடி சாலை சந்திப்பில் சாலை பிள்ளையார் கோயில் இருக்கிறது. அண்மையில் இந்த கோயில் புனரமைக்கப்பட்டு புதிய உண்டியல் வைக்கப்பட்டது. சாலையோர கோயில் என்றாலும் பக்தர்கள் ஏராளமானவர்கள் வருவார்கள். இதனால் உண்டியலில் பணம் குவிந்துள்ளது. இந்த உண்டியலை தற்போது கொள்ளையர்கள் குறிவைத்து தூக்கிச் சென்றுள்ளனர். அதிகாலை 2.30 மணிக்கு ஆட்டோவில் வந்து கொள்ளையர்கள் உண்டியலை தூக்கிச் சென்றுவிட்டனர். காலையில் கோயிலுக்கு வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இது குறித்து பெரிய கடை காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அங்கிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, கொள்ளையன் ஒருவன் ஆட்டோவை ஓட்டியுள்ளார். சாலையில் ஆட்டோவை நிறுத்திய பின் அதில் ஒருவன், உண்டியலை எடுக்கும் காட்சி பதிவாகியுள்ளது. டிப்டாப்பாக அந்த கொள்ளையன் இருந்துள்ளான்.

`ஒருபக்கம் ஊரடங்கு; மறுபக்கம் உண்டியல் திருட்டு!’- அதிகாலையில் கோயிலில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்

கொரோனா காரணமாக புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் காலை 5 மணிவரை மக்கள் நடமாட காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த தடை நேரத்தை சாதகமாக்கி துணிச்சலுடன் ஆட்டோவில் வந்து கோயில் உண்டியலை அபேஸாக தூக்கிச் சென்ற கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.