வீட்டில் புகுந்து கவரிங் நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையன்… அடகு கடையில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் இளைஞர்

 

வீட்டில் புகுந்து கவரிங் நகைகளை அள்ளிச் சென்ற கொள்ளையன்… அடகு கடையில் நடந்த அதிர்ச்சி… கம்பி எண்ணும் இளைஞர்

தாம்பரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையன், அதனை விற்க அடகு கடைக்கு சென்றபோது, கவரிங் நகைகள் என தெரிந்ததால் அவற்றை வீசிவிட்டு சென்றுவிட்டான். காவல்துறையினர் கொள்ளையனை பிடித்து சிறையில் அடைத்தனர்.

சென்னை, தாம்பரம் இரும்புலியூர் தமிழ்பூங்கா தெருவில் வசித்து வருபவர் ஜீவானந்தம். இவரது வீட்டிற்குள் முன்தினம் புகுந்த கொள்ளையர்கள், 100 பவுன் கவரிங் நகைகள், பணம், பட்டுப்புடவைகளை கொள்ளையடித்து சென்றனர். ஆனால் ஒரிஜினல் தங்க நகைகள் நடந்தது. இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் 18 பவுன் தப்பியது. கொள்ளை குறித்து தாம்பரம் காவல் நிலையத்தில் ஜீவானந்தம் புகார் அளித்தார். இதையடுத்து, ஜீவானந்தம் வீட்டுக்கு கைரேகை நிபுணர்களுடன் சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கைரேகைகளை பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி கேமரா, செல்போன் சிக்னல்கள் வைத்து விசாரணையை தீவிரப்படுத்தி கொள்ளையர்களை தேடினர்.

இந்த நிலையில், மதுரவாயல் மேட்டுகுப்பத்தை சேர்ந்த செல்வா (19) என்ற இளைஞரின் கைரேகை ஜீவானந்தம் வீட்டில் எடுக்கப்பட்ட கைரேகையுடன் ஒத்துப்போனது. இதையடுத்து, காவல்துறையினர் நடத்தி தேடுதல் வேட்டையில் செல்வா சிக்கினான். அப்போது, ஜீவானந்தம் வீட்டில் திருடியதை ஒப்புக்கொண்டான். அவனிடம் இருந்து பட்டுப்புடவைகள், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர், கவரிங் நகைகள் குறித்து விசாரித்தபோது அதை தூக்கி எரிந்துவிட்டேன் என்று செல்வா கூறியுள்ளான். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செல்வா பின்னர் சிறையில் அடைக்கப்பட்டான்.

இந்த நிலையில், சுதந்திரத்தினத்தன்று சிறையில் இருந்து வெளியே வந்த செல்வா மீண்டும் கொள்ளையில் ஈடுபட முயன்றுள்ளான். மதுரவாயலிலிருந்து இரும்புலியூருக்கு வந்த செல்வா, பூட்டிக் கிடந்த ஜீவானந்தத்தின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளான். அங்கிருந்த 3 பீரோக்களை திறந்து லாக்கரை உடைத்து அங்கிருந்த நகைகள், பட்டுப்புடவைகளை திருடியுள்ளான். பின்னர் 8,000 ரூபாய் பணத்துடன் செல்வா தப்பினார். இதையடுத்து, காதலியை சந்தித்த செல்வா, திருட்டு பட்டுப்புடவைகளை கொடுத்துள்ளார்.

பிறகு நகைகளை விற்க அடகு கடைக்கு சென்றுள்ளான் செல்வா. அப்போது, அந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்று தெரிந்துள்ளது. இதனால் ஆத்திரத்தில் அந்த நகைகளை தூக்கி எரிந்துவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கியுள்ளார். அப்போதுதான் காவல்துறையினரிடம் அவன் சிக்கியுள்ளான். அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நான் திருடியது கவரிங் நகைகள்தான், என்னை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று கதறியுள்ளான் செல்வா. இதையடுத்து, அவனை மீண்டும் காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.