மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருட்டு… கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி, கம்மல்!- சிசிடிவி கேமராவால் சிக்கிய கில்லாடி கொள்ளையன்

 

மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருட்டு… கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி, கம்மல்!- சிசிடிவி கேமராவால் சிக்கிய கில்லாடி கொள்ளையன்

ஊரடங்கு காலத்தில் மனைவி, குழந்தைகளை ஊருக்கு அனுப்பிவைத்து விட்டு கொள்ளையன் ஈடுபட்டு வந்த திருடன், காதலிக்கு ஜிமிக்கி, கம்மல் வாங்கி கொடுத்து அழகு பார்த்துள்ளார். சிசிடிவி கேமராவால் தற்போது கொள்ளையன் சிக்கிக் கொண்டான்.

சென்னை அண்ணா சாலை, பீட்டர்ஸ் சாலை பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உள்ள வீட்டுகளில் தங்க நகை உள்ளிட்ட பொருட்கள், வெளியில் நிறுத்தி வைக்கப்படும் பைக்குகள் திருடு போவதாக அண்ணா சாலை காவல்நிலையத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. கடந்த மாதம் 26-ம் தேதி அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 5 சவரன் நகைகள் திருடு போய்விட்டதாக காவல்துறையினரிடம் மீண்டும் புகார் வந்தது. இதையடுத்து, கொள்ளையனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, சந்தேகப்படும் படியான ஒரு நபரை பின்தொடர்ந்தனர். அவர் திருவல்லிக்கேணி, மாட்டாங்குப்பத்தை சேர்ந்த மேகநாதன் (32) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை பிடித்து வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தினர். முதலில் திருடவே இல்லை என்று கூறிய மேகநாதன், பின்னர் தங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது, திருடுவதை ஒப்புக் கொண்டுள்ளார். அப்போது காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “கொரோனா ஊரடங்கின் காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டேன். இதன் பின்னர் திருட ஆரம்பித்தேன். திருடிய நகைகளை எல்லாம் தி.நகரில் உள்ள ஒரு சிறிய நகைக்கடையில் விற்பனை செய்து வந்தேன். திருடிய நகைகளை விற்ற பணத்தில் பிரபல நகைக் கடையில் புதிதாக ஜிமிக்கி, கம்மல் ஆகியவை வாங்கி தனது கள்ளக் காதலிக்கு கொடுத்து வந்தேன்” என்று கூறியுள்ளார்.

மனைவியை ஊருக்கு அனுப்பிவிட்டு திருட்டு… கள்ளக் காதலிக்கு ஜிமிக்கி, கம்மல்!- சிசிடிவி கேமராவால் சிக்கிய கில்லாடி கொள்ளையன்

இதையடுத்து திருட்டு நகைகளை விற்ற கடைக்குச் சென்ற காவல்துறையினர் விசாரணை செய்தபோது நகைக்கடைக்காரர்கள் 18 கிராம் நகை மட்டுமே தாங்கள் வாங்கியதாக கூறியுள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் 5 சவரன் நகையை திருடனிடமிருந்து வாங்கியதாக ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து கடைக்காரரிடம் இருந்து 5 சவரன் நகையை காவல்துறையினர் மீட்டனர்.

தண்டையார்பேட்டை மற்றும் அண்ணா சதுக்கம் ஆகிய காவல் நிலையங்களில் நகை, லேப்டாப், இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேகநாதனை சிறையில் அடைத்தனர்.