நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்; தியேட்டர்களை திறந்துவிடுங்கள்- ஆர்.கே. செல்வமணி

 

நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்; தியேட்டர்களை திறந்துவிடுங்கள்- ஆர்.கே. செல்வமணி

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் மக்கள் கூடும் இடங்களான தியேட்டர்கள், மால்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வணிக வளாகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் திறக்க அனுமதி வழங்கிய அரசு தியேட்டர்களை திறக்க அனுமதிக்கவில்லை. சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளுக்கு கூட அண்மையில் வழங்கப்பட்டது. தியேட்டர்களில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாது. அப்படியே, ஒரு சீட் விட்டு மற்றொரு சீட்டில் மக்கள் அமர்ந்து தனிமனித இடைவெளியை கடைபிடித்து படம் பார்த்தாலும் அதனை ஈடு செய்ய டிக்கெட் கட்டணம் அதிகரிக்கும். இவ்வாறாக பல்வேறு சிக்கல்கள் தியேட்டர்கள் திறப்பதில் நீடிக்கிறது. இதனிடையே, ரிலீஸ் ஆகாமல் இருக்கும் நூற்றுக்கணக்கான படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றன. அதனால் எப்போது தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்படும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

நாங்கள் கொரோனாவுடன் வாழப் பழகிவிட்டோம்; தியேட்டர்களை திறந்துவிடுங்கள்- ஆர்.கே. செல்வமணி

இந்நிலையில் பேய்மாமா திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, “தமிழக அரசு திரைப்பட துறைக்கு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது. கொரோனா காலத்தில் திரைத்துறையினருக்கு 3 முறை நிவாரணம் வழங்கியுள்ளது. சாமானியனும் தலைமைச் செயலகத்தை அணுகும் வகையில் இந்த அரசு உள்ளது. முதல்வரின் தாய் இறந்ததை கேட்டபோது நம்முடைய உறவினர் ஒருவர் இழந்ததைப் போன்று இருந்தது. கலைஞர்கள் கமர்ஷியல் படங்களிலும் நடிக்க வேண்டும், அதே சமயம் கலைநயமிக்க படங்களிலும் நடிக்க வேண்டும். தியேட்டர்களை திறக்க அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். நாங்கள் கொரோனா உடன் வாழப் பழகிவிட்டோம். தியேட்டர்களை திறந்துவிடுங்கள். வரி சுமையில் இருந்தும், கொரோனா சூழலில் இருந்தும் திரைப்படத் துறையை தமிழக அரசு காப்பாற்ற வேண்டும்” எனக் கூறினார்.