தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ், கதிரேசன் தேர்வு!

 

தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ், கதிரேசன் தேர்வு!

துணைத்தலைவர் பதவிக்கு தயாரிப்பாளர்கள் ஆர் கே சுரேஷ் மற்றும் கதிரேசன் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர்.

தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ், கதிரேசன் தேர்வு!

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்றது. சென்னை எம்ஜிஆர் கல்லூரியில் நடந்த இந்த தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனர் முரளி தேர்வாகியுள்ளார். இவரை எதிர்த்து டி. ராஜேந்தர் மற்றும் தேனப்பன் இருவரும் போட்டியிட்ட நிலையில் முரளி 557 பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவர் பதவிக்கு ஆர்.கே. சுரேஷ், கதிரேசன் தேர்வு!

இந்நிலையில் துணைத்தலைவர் பதவிக்கு முரளி அணியிலிருந்து ஆர்.கே.சுரேஷும், சுயேட்சையாக போட்டியிட்ட கதிரேசனும் வெற்றி பெற்றுள்ளனர். கதிரேசன் 500 வாக்குகள், ஆர்.கே.சுரேஷ் 425 வாக்குகளும் பெற்று வெற்றி கண்டுள்ளனர். இந்த பதவிக்கு டி.ஆர். அணியை சேர்ந்த யாரும் தேர்வாகவில்லை.