பா.ஜ.க. அப்படித்தான்.. பேசாம மெகாகூட்டணிக்கு வாங்க.. தேஜஸ்வியை முதல்வராக்குங்க.. நிதிஷ் குமாருக்கு அட்வைஸ்

பா.ஜ.க. அப்படித்தான்.. பேசாம மெகாகூட்டணிக்கு வாங்க.. தேஜஸ்வியை முதல்வராக்குங்க.. நிதிஷ் குமாருக்கு அட்வைஸ்

பா.ஜ.க. சின்ன கட்சிகளை அழித்து விடும். ஆகையால் மெகா கூட்டணியில் இணைந்து தேஜஸ்வி யாதவை முதல்வராக்குங்க என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் ஒருவர் அட்வைஸ் செய்துள்ளார்.

பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ( ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க.) அரசாங்கம் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.க்கள் 7 பேரில் 6 பேர் பா.ஜ.க.வுக்கு தாவி விட்டனர். இதனால் பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனை தனக்கு சாதமாக்கி கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் முயற்சி செய்கிறது. நிதிஷ் குமாரை தங்கள் கூட்டணிக்கு இழுக்க அந்த கட்சி முயற்சி செய்துள்ளது.

பா.ஜ.க. அப்படித்தான்.. பேசாம மெகாகூட்டணிக்கு வாங்க.. தேஜஸ்வியை முதல்வராக்குங்க.. நிதிஷ் குமாருக்கு அட்வைஸ்
நிதிஷ் குமார்

ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான உதய் நாராயண் சவுத்ரி கூறியதாவது: சின்ன கட்சிகளை பா.ஜ.க. விரும்பவில்லை. அந்த கட்சிகளை அழிக்க பா.ஜ.க. விரும்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து ஐக்கிய ஜனதா தளம் வெளியேற வேண்டும் என்று பா.ஜ.க. விரும்புகிறது. தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகி மெகா கூட்டணியில் இணைந்து தேஜஸ்வி யாதவை முதல்வராக்கும்படி நிதிஷ் குமாரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.

பா.ஜ.க. அப்படித்தான்.. பேசாம மெகாகூட்டணிக்கு வாங்க.. தேஜஸ்வியை முதல்வராக்குங்க.. நிதிஷ் குமாருக்கு அட்வைஸ்
உதய் நாராயண் சவுத்ரி

நீங்க (நிதிஷ் குமார்) தேசிய அரசியலில் நுழைந்து எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். அதேசமயம், அருணாசல பிரதேசத்தில் என்ன நடந்ததோ அதனால் பீகார் மற்றும் பீகார் அரசை பாதிக்காது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர்கள் தெரிவித்ததாக பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினர் சுஷில் குமார் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் கூறியது குறிப்பிடத்தக்கது.