அதிகரிக்கும் கொரோனா தொற்று… இலங்கையில் புதிய கட்டுப்பாடு!

 

அதிகரிக்கும் கொரோனா தொற்று… இலங்கையில் புதிய கட்டுப்பாடு!

கொரோனா பரவத்தொடங்கியது முன்னெச்சரிக்கையாகக் கட்டுப்படுத்திய நாடுகளில் ஒன்று இலங்கை. ஆனால், சமீப சில நாட்களாக அங்கு கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

இலங்கையில் இன்றைய தேதி வரை கொரொனாவின் மொத்த பாதிப்பு 4,443 பேர். அவர்களில் 3,274 பேர் சிகிச்சை பலனால் குணம் அடைந்துவிட்டனர். 13 பேர் இதுவரை கொரோனாவால் இலங்கையில் மரணம் அடைந்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று… இலங்கையில் புதிய கட்டுப்பாடு!

கொரோனா கட்டுக்குள் கொண்டுவந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று இலங்கையில் சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது.

நேற்று மட்டுமே 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் ஜுலை 10-ம் தேதிதான் 300 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட தினம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வளவு அதிகரித்திருக்கிறது.

அதிகரிக்கும் கொரோனா தொற்று… இலங்கையில் புதிய கட்டுப்பாடு!

இந்நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையைச் சேர்ந்தவர்களை இலங்கை அழைத்து வருவதை தற்காலிகமாக நிறுத்த முடிவு எடுத்துள்ளது. இதற்கு காரணம், அதிகரித்து வரும் கொரோனாவே.

கொழும்பு விமானநிலையத்தில் பணிபுரியும் சிலருக்குக் கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட்டிருக்கின்றன. உடனே, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.