சென்னையில் அதிகரித்த காற்று மாசு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!

சென்னையில் அதிகரித்த காற்று மாசு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடிக்கப்பட்டதால் காற்றின் மாசு அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகையானது நேற்று இந்தியா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கொரோனா பரவல் மத்தியில் மக்கள் பல மாதங்களாக வீடுகளில் முடங்கிக் கிடந்த நிலையில் தீபாவளி பண்டிகை சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக அமைந்தது என்றே சொல்லலாம்.

சென்னையில் அதிகரித்த காற்று மாசு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  எச்சரிக்கை!

குறிப்பாக தமிழகத்தில் பொது மக்கள் பலரும் புத்தாடை அணிந்து, இனிப்பு வழங்கி தீபாவளி பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். அத்துடன் அதிகாலை முதலே அவர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனமும் செய்தனர். வழக்கமான தீபாவளியாக இந்த தீபாவளி அமையாமல் பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழக அரசால் குறைவாகவே கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் நேற்று காலை வரை சென்னையில் காற்று தரக்குறியீடு 100 ஆக இருந்தது.

சென்னையில் அதிகரித்த காற்று மாசு : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்  எச்சரிக்கை!

இந்நிலையில் தமிழகத்தில் மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் பட்டாசு வெடிக்க அரசு அனுமதி அளித்திருந்த நிலையில் மக்கள் பட்டாசுகளை வெடித்து தீர்த்தனர். இதனால் காலையில் இருந்த காற்றின் தரக்குறியீடு மாலையில் 159 ஆக அதிகரித்தது. இதேபோல் தூத்துக்குடி, கடலூர், மதுரை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. இருப்பினும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காற்று மாசு குறைந்து விட்டதாகவே தெரிகிறது.ஆனால் கொரோனா பரவலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள்,. சிறியவர்கள், முதியவர்களுக்கு பட்டாசு புகை நுரையீரல் பிரச்னையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.