தோனியை ஓவர்டேக் செய்த ரிஷப் பண்ட்!

 

தோனியை ஓவர்டேக் செய்த ரிஷப் பண்ட்!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் சாதனையை இளம் வீரர் ரிஷப் பண்ட் முறியடித்திருக்கிறார். ஆஸ்திரேலியா உடனான நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

இந்தியாவிலேயே குறைந்த இன்னிங்ஸில் (27) ஆயிரம் ரன்களைக் கடந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன்னர் தோனி 32 இன்னிங்ஸில் இந்தச் சாதனையைப் புரிந்திருந்தார். அவரது சாதனையை பண்ட் முறியடித்திருக்கிறார்.

தோனியை ஓவர்டேக் செய்த ரிஷப் பண்ட்!

டெஸ்ட் போட்டிகளில் 40 ஆவரேஜ் வைத்திருக்கும் பண்ட் இரு சதங்களையும் மூன்று அரை சதங்களையும் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் மிகச் சிறப்பாக ஆடும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 2018-19 ஆஸ்திரேலிய பயணத்தில் சிட்னியில் ஆட்டமிழக்காமல் 159 ரன்கள் அடித்திருந்தார். தற்போது நடைபெற்ற வார்ம்அப் போட்டியிலும் சதம் அடித்தார்.

தோனியை ஓவர்டேக் செய்த ரிஷப் பண்ட்!

பார்டர்-கவாஸ்கர் தொடரில் அவர் சதம் அடிக்காமல் போனாலும், இரண்டு போட்டிகளில் இந்தியாவைக் காப்பாற்றியிருக்கிறார். 97 ரன்கள் அடித்து ஒரு போட்டியில் டிரா செய்ய உதவிய பண்ட், இன்று நடந்துமுடிந்த பிரிஸ்பேன் போட்டியில் ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் அடித்து அணியை வெற்றிபெற செய்து, தொடரை வெல்லவும் உறுதுணையாக இருந்துள்ளார். ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார். இந்தியா ஒன்பதாவது முறையாக பார்டர்-கவாஸ்கர் கோப்பையைக் கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.