ரிஹானாவின் மேலாடை இல்லாத படம்… கழுத்தில் விநாயகர் டாலர்… கொதிக்கும் இந்துத்துவவாதிகள்!

 

ரிஹானாவின் மேலாடை இல்லாத படம்… கழுத்தில் விநாயகர் டாலர்… கொதிக்கும் இந்துத்துவவாதிகள்!

விவசாயிகளுக்கு ஆதரவாக ட்வீட் செய்து சர்வதேச கவனத்தைக் கட்டியெழுப்பியவர் பாப் பாடகி ரிஹானா. அப்போதே பாஜக ஆதரவாளர்களும் இந்துத்துவவாதிகளும் ரிஹானாவை கடுமையாக வசைபாடினர். அவரின் பதிவை ஆதரித்தவர்களையும் எதிர்த்தனர். இவருக்கு எதிராக இந்தியப் பிரபலங்களான சச்சின், கோலி, அக்‌ஷய் குமார் என அனைவரும் ட்விட்டரில் பதிவிட்டனர். கடந்த சில நாட்களாகத் தான் ரிஹானா பற்றிய பேச்சு ஓய்ந்தது.

ரிஹானாவின் மேலாடை இல்லாத படம்… கழுத்தில் விநாயகர் டாலர்… கொதிக்கும் இந்துத்துவவாதிகள்!

ஆனால், தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் தான் அதற்குக் காரணம். இன்று அவர் ட்விட்டரில், பாப்கான் மியூஸிக் நிறுவனம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க உள்ளாட்டை இல்லாமல் புகைப்படம் வெளியிட்டதாகக் குறிப்பிட்டிருந்தார். அதனுடன் சர்ச்சைக்குரிய அந்தப் படம் இடம்பெற்றிருந்தது. மேலாடை அணியாமல் ரிஹானா மார்புகளைக் கையால் மறைத்து நின்றபடி போஸ் கொடுத்திருக்கிறார். அதில் ஒரு செயினில் விநாயகர் உருவம் பொறித்த டாலரைத் தொங்கவிட்டிருக்கிறார். அந்த டாலர் சரியாக அவரின் தொப்புளை மறைத்திருந்தது.

ஏற்கனவே ரிஹானா மீது கடுங்கோபத்தில் இருந்த பாஜக ஆதரவாளர்களும் தலைவர்களும் எரிகின்ற தீயில் எண்ணெய்யை ஊற்றியதுபோல கொந்தளித்துவிட்டார்கள். இப்புகைப்படத்தின் மூலம் ரிஹானாவின் அஜெண்டா என்ன என்பதும், அவரின் சதித்திட்டம் அம்பலமாகியதாகவும் பாஜக தலைவர் ராம் கதா கொந்தளித்திருக்கிறார். இந்துக் கடவுளான விநாயகரை ரிஹானா அவமதித்துவிட்டதாகவும் இந்துத்துவர்கள் பொங்கியெழுந்துள்ளனர்.