மது அருந்தியதை உறவினர்கள் கண்டித்ததால், இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

 

மது அருந்தியதை உறவினர்கள் கண்டித்ததால், இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

விருதுநகர்

மது அருந்தியதை உறவினர்கள் கண்டித்ததால், மனமுடைந்த அரிசி ஆலை உரிமையாளர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

ராஜபாளையம் அடுத்த சோழபுரம் கீழூரை சேர்ந்தவர் செல்வமுத்து (36). அரிசி ஆலை உரிமையாளர். இவருக்கு திருமணமாகி திலகவதி என்ற மனைவியும், ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்ற செல்லமுத்தை, மனைவி மற்றும் உறவினர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த செல்லமுத்து வீட்டில் கோபித்துக் கொண்டு வெளியேறினார். அவரை உறவினர்கள் தீவிரமாக தேடி வந்த நிலையில், நல்லமநாயக்கர்பட்டி ரயில்வே லெவல் கிராசிங் பகுதிக்கு சென்ற செல்லமுத்து, அந்த வழியாக வந்த கொல்லம் விரைவு ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

மது அருந்தியதை உறவினர்கள் கண்டித்ததால், இளைஞர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை!

தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இது குறித்து, செல்வமுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, இன்று மகளுக்கு காதணி விழா நடைபெற இருந்த நிலையில், செல்வமுத்து தற்கொலை செய்து கொண்டது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.