ஸ்கைப் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை

 

ஸ்கைப் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை

கொரோனா நோய்த் தொற்று கரணமாக நாடே முடங்கி இருந்தாலும் முக்கியமான அரசு அலுவலகங்கள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படி இயங்கும் அலுவலகங்களில் பணியாளர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவினால் அந்த அலுவலகம் குறிப்பிட்ட நாள்களுக்கு மூடப்படும்.

தற்போது சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் மூடப்பட்டிருக்கும் நிலையில் அதன் பணிகள் ஸ்கைப் மூலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்கைப் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை

கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக சென்னை பிராந்திய பாஸ்போரட் அலுவலகத்தில் உள்ள பொது விசாரணை கவுண்டர்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும்,  நிலுவையில் உள்ள அவசரமான பாஸ்போர்ட் விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக, விண்ணப்பதாரர்கள் ஸ்கைப் மூலம் வீடியோகால் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வசதி இன்று (05.08.2020) முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

ஸ்கைப் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பரிசீலனை

சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தில், நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்ள, விண்ணப்பதாரர்கள், அனைத்து வேலை நாட்களிலும் காலை பத்து மணி முதல் பிற்பகல் 12.30 வரை, Regional Passport Office Chennai என்ற ஸ்கைப் ஐடி-யில் தொடர்பு கொள்ளலாம்.

இந்த ஸ்கைப் வீடியோகால் வசதி பொது விசாரணைக்குப் பொருந்தாது, இது அவசர விசாரணைக்கு மட்டுமே.

பாஸ்போர்ட் தொடர்பான பொது விசாரணைகளுக்கு 1800-258-1800 என்ற டோல் ஃப்ரீ எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  rpo.chennai@mea.gov.in  என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் தகவல் அனுப்பலாம்.