ஓய்வு அறிவித்த இளம் கிரிக்கெட்டர் – அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்!

 

ஓய்வு அறிவித்த இளம் கிரிக்கெட்டர் – அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்!

கிரிக்கெட்டில் ஒருவரின் ஆக்டிவாக உள்ள காலம் என்பது மிகக் குறுகியதுதான். 20 வயதை ஒட்டி அணிக்குள் நுழைந்தால், 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக நீடிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏனெனில், ஒவ்வொரு முறையும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஒரு தொடரில் மோசமாக ஆடினாலும் அணியிலிருந்து நீக்கப்படலாம். அதுவே தொடர்ந்து பலமுறை மோசமாக ஆடினால், அணியிலிருந்து முழுமையாகவே நீக்கப்படலாம்.

ஆனால், ஓர் இளம் வீரர் ஆக்டிவாக இருக்கும்போதே, பல மூத்த வீரர்கள் அவரின் பவுலிங் திறமையை மெச்சிக்கொண்டிருக்கும்போதே தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். இது பலருக்கும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.

ஓய்வு அறிவித்த இளம் கிரிக்கெட்டர் – அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்!

பாகிஸ்தான் கிரிகெட் அணியின் நம்பிக்கை அளிக்கும் வேகப் பந்து வீச்சாளர் முகம்மது அமீர். 2009 ஆண்டில்தான் தனது முதல் போட்டியை பாகிஸ்தான் அணிக்காக ஆடினார். அப்போது அவருக்கு 17 வயதுதான். பலரும் வியக்கும் விதத்தில் அவரின் பந்து வீச்சு இருந்தது.

இதுவரை அமீர் டெஸ்ட் போட்டிகளில் 119, ஒருநாள் போட்டிகளில் 81, டி20 போட்டிகளில் 59 விக்கெட்டுகளை வீழ்த்தீருக்கிறார். இடையில் அமீர் மீது சூதாட்ட புகார் அளிக்கப்பட்டதால் சில ஆண்டுகள் அவர் விளையாட தடை விதிக்கப்பட்டது.

ஓய்வு அறிவித்த இளம் கிரிக்கெட்டர் – அதிர்ச்சியில் மூத்த வீரர்கள்!

அதன்பின் மீண்டு வந்த அவர் சிறப்பாக பந்து வீசி வந்தார். ஆனால், திடீரென்று சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். அதற்கான காரணமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தன்னை மோசமாக நடத்தியதைக் குறிப்பிடுகிறார். மேலும், அணி நிர்வாகம் தம் மீது கடும் அழுத்தத்தைக் கொடுத்ததாகவும் சொல்கிறார்.

28 வயதே ஆன அமீரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் உலகின் சீனியர் வீரர்களுக்குமே அதிர்ச்சிதான்.