அதிகரித்து வரும் பணவீக்கம்… வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி கொஞ்சம் நாளைக்கு மறந்து விடும்?

அதிகரித்து வரும் பணவீக்கம்… வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி கொஞ்சம் நாளைக்கு மறந்து விடும்?

கடந்த சில மாதங்களாக மொத்த மற்று சில்லரை விலை பணவீக்கம் அதிகரித்து வருவதால் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி மேலும் தாமதப்படுத்தலாம் என்று தெரிகிறது.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வாடிக்கை. அந்த கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்யும் போது சில்லரை விலை பணவீக்கத்தை கருத்தில் கொண்டே முடிவு எடுக்கும்.

அதிகரித்து வரும் பணவீக்கம்… வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி கொஞ்சம் நாளைக்கு மறந்து விடும்?
இந்திய ரிசர்வ் வங்கி

சில்லரை விலை பணவீக்கத்தை 4 சதவீதமாக (2 சதவீதம் கூடலாம் அல்லது குறையலாம்) கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. அதனால் சில்லரை விலை பணவீக்கத்தை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும். கடந்த அக்டோபர் மாதத்தில் சில்லரை விலை பணவீக்கம் 7.61 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அதிகரித்து வரும் பணவீக்கம்… வட்டி விகிதத்தை குறைப்பதை ரிசர்வ் வங்கி கொஞ்சம் நாளைக்கு மறந்து விடும்?
பணவீக்கம்

தொடர்ந்து 7 மாதங்களாக சில்லரை விலை பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் அதிகபட்ச கட்டுப்பாட்டு அளவான 6 சதவீதத்தை காட்டிலும் அதிகமாக உள்ளது. இதனால் ரிசர்வ் வங்கி முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதை தாமதப்படுத்தலாம் என தெரிகிறது. கடந்த மாதம் நடைபெற்ற நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டி விகிதத்தில் ரிசர்வ் வங்கி எந்தவித மாற்றமும செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.