காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை!

 

காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை!

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன் இறங்கு தள பகுதிகளில் பொதுமக்களுக்கு மீன் விற்பனை செய்வது இன்று முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சில்லறை வியாபாரிகள் மீன்களை வாங்கிக் கொண்டு துறைமுகத்தின் வடக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மீன் விற்பனை செய்யலாம் என்றும் தற்போது துறைமுகத்தில் சில்லறை விற்பனை செய்யும் வியாபரிகளுக்கு மட்டுமே அங்கு அனுமதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை! காசிமேடு மீன்பிடி தளத்தில் இன்று முதல் சில்லறை விற்பனைக்கு தடை!

காலை 5 மணி முதல் 11 மணி வரை மட்டுமே சில்லறை கடைகள் திறந்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் இந்த சில்லறை கடைகளில் மட்டுமே மீன் வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மீன்களை ஏலம் விடும் இடத்திலும் இறக்கும் தளத்திலும் பொதுமக்கள் எக்காரணத்திலும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் துறைமுகத்துக்கு செல்லாமல் சில்லறை விற்பனை கடைகளில் மட்டுமே மீன் வாங்க வேண்டும் என்றும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் உள்ளிட்டவற்றை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.