திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திமுக கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனுக்கு எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு!

அந்த புகாரின் பேரில் கடந்த 23 ஆம் தேதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதற்கு மட்டுமே அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் குறித்து பேசியதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அதனால், வழக்கறிஞர் அந்தோணி ஆர்.எஸ்.பாரதி மீது நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அந்த மனு தொடர்பாக 2 வாரத்துக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ் பாரதி ஜமீனுக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்க உள்ளனர்.