குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்!!

 

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்!!

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,13,32,159 ஆக அதிகரித்துள்ளது.அதேபோல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,20,016 ஆக அதிகரித்துள்ளது. அதே சமயம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் மொத்த எண்ணிக்கை 3,05,03,166 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கொரோனாவை எதிர்கொள்ள இதுவரை 42,78,82,261 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.தற்போது இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி : எய்ம்ஸ் இயக்குநர் சொன்ன முக்கிய தகவல்!!

இந்நிலையில் குழந்தைகளுக்கான கோவாக்சின் கொரோனா தடுப்பூசி ஆய்வு முடிவு செப்டம்பருக்குள் வரும் என்று எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார். பாரத் பயோடெக் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி குறித்து ஆய்வு செய்து வருகிறது என்றார்.மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல், அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்த்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல், கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றினால் மூன்றாவது அலையை தடுக்கலாம் என எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியாஏற்கனவே அறிவித்த நிலையில் வரும் மாதங்களில் வைரஸ் அவ்வளவு ஆபத்தான முறையில் உருமாறாது என்றும் நம் மக்களுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.