’தலித் மக்களின் நிலத்தை தலித் மக்களுக்கே மீட்டுக்கொடு’ – ஈரோடு ஆட்சியரிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை வைத்த கோரிக்கை

’தலித் மக்களின் நிலத்தை தலித் மக்களுக்கே மீட்டுக்கொடு’ – ஈரோடு ஆட்சியரிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை வைத்த கோரிக்கை

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பொதுமக்கள் தாங்கள் கொண்டு வந்த மனுக்களை கலெக்டர் நுழைவாயில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் போட்டு சென்றனர். அருந்ததியர் இளைஞர் பேரவை ஒருங்கிணைப்பாளர் வடிவேல் ராமன் தலைமையில் நிர்வாகிகள் வந்து மனு போட்டனர்.

’தலித் மக்களின் நிலத்தை தலித் மக்களுக்கே மீட்டுக்கொடு’ – ஈரோடு ஆட்சியரிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை வைத்த கோரிக்கை

அம்மனுவில், ‘’ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த நஞ்சைஊத்துக்குழி பகுதியில் சுமார் 100 ஏக்கர் தரிசு நிலத்தை நில உச்சவரம்புச் சட்டத்தின் கீழ் செயல்படும் நில சீர்திருத்த துறை மூலம் இப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் சுமார் 100 நபர்களுக்கு கடந்த 30 வருடங்களுக்கு முன்பு நில ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நிலங்கள் தரிசு நிலமாக உள்ளதால் பாசன வசதி இல்லை. இதனால் இங்கு எவ்வித பணியும் மேற்கொள்ளாமல் உள்ளது.

’தலித் மக்களின் நிலத்தை தலித் மக்களுக்கே மீட்டுக்கொடு’ – ஈரோடு ஆட்சியரிடம் அருந்ததியர் இளைஞர் பேரவை வைத்த கோரிக்கை

இந்நிலையில் வேறு சிலர் குறைந்த விலைக்கு இந்த நிலத்தை எழுதி வாங்கி விட்டார்கள். தற்போது இந்த இடத்தில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. வருவாய் துறை ஆவணங்களில் நில ஒதுக்கீடு பெற்ற பட்டியலின மக்களின் பெயர் உள்ளது. எனவே இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மேலும் இப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் இங்கு அரசு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு போதுமான நிலத்தை ஒதுக்கித் தரவேண்டும்’’என்று கூறியுள்ளனர்.