“வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்” : முதல்வர் ஸ்டாலின்

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்” : முதல்வர் ஸ்டாலின்

மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்” : முதல்வர் ஸ்டாலின்

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி போராட்டம் தொடங்கிய நிலையில் இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லாததால் தொடர்ந்து போராட்டம் அரங்கேறி வருகிறது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது விவசாயிகள் போராட்டம் செய்து வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரத்தை நீட்டியுள்ளனர் .

“வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்” : முதல்வர் ஸ்டாலின்

இந்நிலையில் 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்றுடன் 6 மாத கடக்கவுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை, உணர்வுகளை மதித்து சட்டங்களை திரும்பப் பெற முன்வரவில்லை. இது தொடர்பாக ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்தது கவலையளிக்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளுக்கு திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் . 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.