ராஜினாமா செய் நிர்மலா… ட்விட்டர் டிரெண்டால் பா.ஜ.க அதிர்ச்சி

 

ராஜினாமா செய் நிர்மலா… ட்விட்டர் டிரெண்டால் பா.ஜ.க அதிர்ச்சி


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று ட்வீட்டரில் டிரெண்ட் ஆகி உள்ளது பா.ஜ.க-வுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளது.
யூடியூபில் வெளியான பிரதமர் மோடியின் ஆகஸ்ட் மாதத்துக்கான மான் கி பாத் உரையாடலுக்கு மிகப்பெரிய அளவில் டிஸ்லைக் கிடைத்தது. இதை எதிர்கொள்ள பா.ஜ.க தொண்டர்கள் தீயாக வேலை செய்தும் டிஸ்லைக்கை நெருங்கக் கூட முடியவில்லை. 9.34 லட்சம் பேர் டிஸ்லைக் செய்துள்ள நிலையில், பா.ஜ.க தொண்டர்களின் தீவிர முயற்சி காரணமாக 2.06 லட்சம் லைக் கிடைத்துள்ளது.

ராஜினாமா செய் நிர்மலா… ட்விட்டர் டிரெண்டால் பா.ஜ.க அதிர்ச்சி


இந்த நிலையில் நாட்டின் ஜி.டி.பி அதலபாதாளத்தில் வீழ்ந்தது என்று செய்தி வெளியாகவே, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என்று இன்று ட்விட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே, கொரோனா பாதிப்பு, வருவாய் இழப்பு என்பது கடவுளின் செயல் என்று நிர்மலா சீதாராமன் பேசியது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ராஜினாமா செய் நிர்மலா… ட்விட்டர் டிரெண்டால் பா.ஜ.க அதிர்ச்சி

அப்போதே நிர்மலா சீதாராமனைப் பதவி விலக வலியுறுத்தி #ResignNirmala டிரெண்ட் செய்யப்பட்டது. லட்சக் கணக்கானோர் அந்த ஹேஷ்டேகை வைத்து பதிவிட்டு வருவதால், இந்திய அளவில் அது டிரெண்ட் ஆகி உள்ளது. நேற்று மோடியின் மான் கி பாத்துக்கு எதிர்ப்பு, இன்று நிர்மலா சீதாராமன் பதவி விலக வலியுறுத்தல் என்று சமூக ஊடகங்களில் அடிமேல் அடி வாங்குவதால் பா.ஜ.க-வினர் சற்று கலக்கத்தில் உள்ளனர்.