பணியிடங்கள் நிரப்புவதிலும் கோல் மால்! உச்சநீதிமன்றம் காட்டம்!!

 

பணியிடங்கள் நிரப்புவதிலும் கோல் மால்! உச்சநீதிமன்றம் காட்டம்!!

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல் மிகவும் பிற்படுத்த மற்றும் சீர் மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழக பள்ளிக்கல்வி துறையில் 356 முதுநிலை வேதியியல் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான நியமன அறிவிப்பாணையை கடந்த 2019 ஜூன் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. அதில், அதிக மதிப்பெண்கள் பெற்ற இட ஒதுக்கீட்டு பிரிவினரைப் பொதுப் பிரிவில் சேர்க்காமல், மிகவும் பிற்படுத்த மற்றும் சீர்மரபினருக்கான இட ஒதுக்கீட்டில் நியமித்திருந்தது. இதனை ரத்து செய்யக்கோரி பாதிக்கப்பட்ட ஷோபனா, சித்ரா உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பணியிடங்கள் நிரப்புவதிலும் கோல் மால்! உச்சநீதிமன்றம் காட்டம்!!

இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த பட்டியலை மறுபரிசீலனை செய்து புதிய பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், அதன்பின்னர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஆதரவு தெரிவித்து, தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட்டனர். மேலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பொது பிரிவில் சேர்க்காமல் இட ஒதுக்கீட்டு பிரிவில் சேர்த்தது தவறு என்றும் கருத்து தெரிவித்தது.