கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

 

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?

ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதங்களில் ரிசர்வ் வங்கி எந்தவித மாற்றங்கள் செய்ய வாய்ப்பில்லை என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் 2 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த கூட்டத்தில் முக்கிய கடன்களுக்கான (ரெப்போ, ரிவர்ஸ் ரெப்போ ரேட்) வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி முடிவு செய்யும். கடனுக்கான வட்டியை நிர்ணயம் செய்யும் போது நடப்பில் உள்ள சில்லரை விலை பணவீக்க நிலவரத்தை மனதில் கொண்டே முடிவு செய்யும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகந்த தாஸ் தலைமையில் ரிசர்வ் வங்கியின் 2 நாள் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் நேற்று தொடங்குகிறது.

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
இந்திய ரிசர்வ் வங்கி

இந்த நிதியாண்டில் (2021-22) நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் முதல் நிதிக் கொள்கை ஆய்வு கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பான விவரங்களை வரும் 7ம் தேதி (நாளை) ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவிப்பார். நேற்று தொடங்கிய நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்தில் கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

கடனுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி குறைக்குமா?
சக்திகந்த தாஸ்

ஆனால் முக்கிய கடன்களுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு இல்லை தகவல்கள் வெளியாகியுள்ளது. பொருளாதார மீட்சி இன்னும் சீரற்றதாக உள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது போன்றவற்றால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது ரெப்போ ரேட் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்ரோ ரேட் 3.35 சதவீதமாகவும் உள்ளது